வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அடங்காமல் மாலினி அக்கா அட்டகாசம்

துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளர் மாலினி வெலன்ரைனின் முறைகேடுகளும் சர்வாதிகாரப்போக்கும் உச்சகட்டத்தினை எட்டியுள்ளதால் வடக்கு மாகாண கல்விச்சமூகமே அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றது.

இந்த நிலையில் வட மாகாணத்தின் மாதிரி வலயமாக துணுக்காய் வலயத்தினை வடமாகாண கல்வி அமைச்சினால் உருவாக்கப்பட்டு அதற்கான பதவியேற்பு நிகழ்வு நேற்று (29) நடைபெறவிருந்த நிலையில் அதனை எதிர்த்து ஆசிரியர்களும் ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்தில் குதிக்கத்தயாராகவிருந்தனர். ஒழுக்காற்று விசாரணை நடைபெறும் அரச அதிகாரியொருவர் இவ்வாறான பதவியுயர்வு போன்ற பதவியேற்புக்களை செய்யமுடியாது. இதனை கடந்த சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் வடக்கு முதல்வரிடம் தெரியப்படுத்தியபோது அவர் பதவியேற்பு நிகழ்வினை இரத்துச்செய்வதாக சம்மந்தப்பட்டவர்களிடம் உறுதியளித்திருந்தார் .அதே போன்று கல்வி அமைச்சின் செயலாளரும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக உறுதியளித்திருந்தார். இதன் காரணமாக ஆசிரியர்களின் எதிரப்பு நடவடிக்கைகள் நேற்று கைவிடப்படுவதாக தீர்மானிக்கப்பட்டு அவை பத்திரிகைகளுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது.


        ஆனால் நேற்று(29) மதியம் 12 மணியளில் திடீரென கல்லிப்பணிப்பாளர் உட்பட 24 மாதிரி வலய சபைகளின் உறுப்பினர்களும் தங்களுக்கு தாங்களே பதவிப்பிரமாணங்களை செய்துள்ளார்கள். இதன் மர்மம் மற்றும் பின்னணி என்னவென்று தெரியாமல் வட புல கல்விச்சமூகம் அதிர்ந்துபொயுள்ளது.

முதலமைச்சரதும் கல்வியமைச்சின் செயலாளரதும் பணிப்பினை மாலினி வெலின்ரைன் உதாசீனப்படுத்தினாரா? அல்லது அவரின் இந்த சர்வாதிகார நடவடிக்கைக்கு பின்புலமாக வேறு யாராவது இருக்கின்றார்களா?  இவர்களுக்கே இந்தக்கெதியென்றால் சாதாரண ஆசிரியர்களை எவ்வாறு இவர் வதைப்பார் என்பதை இங்கு கூறவே தேவையில்லை.

    அன்;றைய போராட்டம் தொடர்பாக மூன்று பத்திரிகைகளில் வெளிவந்த மாறுபாடான தகவல்கல்களுடன்கூடிய செய்திகள் இங்கு தரப்பட்டுள்ளன.