மகனைத் தேடி சாராயக் கடைக்குள் புகுந்த அப்பாவால் பதற்றம்

யாழ் நகருக்குச் அண்மையில் உள்ள விடுதி ஒன்றில் பாடசாலை மாணவனான மகன் தனது கூட்டாளிகளுகளுடன் சாராயம் குடித்துக் கொண்டிருப்பதாக அப்பாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக தனது மூத்தமகன் மற்றும் மகள், மருமகன், இரு உறவினர்கள் மற்றும் தாயுடன் குறித்த விடுதியைச் சுற்றி வளைத்தார் தந்தை.

தும்புக்கட்டைத் தடியுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களால் பதற்றமடைந்த காவலாளி அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்ட வேளை அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே நண்பர்களுடன் சாராயம் அருந்திக் கொண்டிருந்த மாணவனும் அவனை ஏற்றி வந்த இன்னொரு மாணவனுமாக மோட்டார் சைக்கிள்களை விட்டுவிட்டு வேறு பாதையால் ஓடித் தப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பொலிசாருக்கு விடுதி நிர்வாகம் அறிவிக்க முற்பட்ட போது அவர்கள் குறித்த நண்பனின் மோட்டார் சைக்கிளை புகைப்படம் எடுத்த பின் அங்கிருந்து சென்றுள்ளனர். இச் சம்பவத்தால் விடுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.