முடிவுக்கு வந்தது பிரேமம்

நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் மே 29-ம் தேதி வெளியான மலையாள படம் பிரேமம். இப்படம் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வெளியானது. காதல் கதையம்சம் கொண்ட இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டானது. மலையாள மொழியிலேயே இப்படம் தமிழ்நாட்டில் வெளியானது.

இங்கேயும் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களை இப்படம் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக சென்னையில் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. தொடர்ந்து 230 நாட்களாக ஓடிய இப்படம் இன்றோடு முடிவுக்கு வரவுள்ளது. இப்படத்தின் கடைசி காட்சி இன்று மாலை திரையிடப்படவுள்ளது. இன்றும் இப்படம் அரங்கம் நிறைந்த காட்சியாக ஓடுகின்றது.

பொங்கல் தினத்தை முன்னிட்டு, ‘கதகளி’, ‘தாரை தப்பட்டை’, ‘கெத்து’, ‘ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் வெளியாவதால் ‘பிரேமம்’ படம் முடிவுக்கு வந்துள்ளது.