பூநகரி சங்குப்பிட்டிப் பகுதியில் கஞ்சா வேட்டை!

பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் படகு ஒன்றில் கொண்டுசெல்லப்பட்ட 248 கிலோ கேரள கஞ்சா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை குறித்த கேரள கஞ்சாவை கைமாற்றும் முயற்சிகள் இடம்பெற்றன. இதன்போதே, அவை கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

எனினும், குறித்த கேரள கஞ்சாவை கொண்டுசென்ற சந்தேகத்துக்குரியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, மன்னார் - சிலாவத்துறை   கரடிக்குளம் கடற்கரைப் பகுதியில் 141 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இதனிடையே, 2 கிலோ 150 கிராம் கேரள கஞ்சா போதைப்பொருளுடன் திருகோணமலை நகர் பகுதியில் வைத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருகோணமலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிண்ணியா பகுதியில் இருந்து குறித்த கேரள கஞ்சா போதைப்பொருள் வியாபார நோக்குடன் திருகோணமலை நகரப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கைது செய்யப்பட்டவர்கள் 37 மற்றும் 42 வயதுடைய கல்முனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.