மாவை சேனாதிராஜாவுக்கு சாராய போத்தல் மாலை!!

இலங்கை தமிழரசு கட்சி யின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா முல்லைத்தீவுக்கு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள வர இருப்பதாக அறிந்து அவரின் வருகைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக இளைஞர்கள் சிலர் இணைந்து குறித்த நிகழ்வு நடைபெறும் கல்வி நிலயத்துக்கு அண்மையாக கறுப்பு கொடிகளோடு எதிர்ப்பை வெளிப்படுத்தும் பதாதைகளை தங்கியவாறு வீதியில் காத்திருந்தனர் .

இருந்த போதிலும்  குறித்த நிகழ்வில் இதை அறிந்த மாவை சேனாதிராசா கலந்து கொள்ள வருகைதராத நிலையில் வீதியில் கறுப்பு கொடிகளையும் பதாதைகளையும் கட்டி சென்றத்தையும் அவதானிக்க முடிந்தது.