அச்சுவேலியில் தென்னந்தோப்பில் வீசியெறியப்பட்ட நகைகள்!

அச்சுவேலி தெற்கு ஆஸ்பத்திரி வீதியில் கடந்த ஜுன் 9ம் திகதி  பாரிய கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில் நேற்றைய தினம் (15) ஒரு வாரத்தின் பின்னர் வீட்டு வளவினுள்  வீசப்பட்டிருந்த பேணி ஒன்றில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட   நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளைச்சம்பவம் குறித்த  வீட்டில்  திருமணம் இடம்பெற்ற நிலையில்    கடந்த 09ம் திகதி மாலை   தனிமையில் இருந்த மணமகனின் தாயினை தாக்கிய கொள்ளையர்கள் 52பவுண் நகைகள் மற்றும் 16இலட்சம் ரூபா பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

இந் நிலையில் நேற்றையதினம் (15) வீட்டில் உள்ள  தென்னந்தோட்டத்தை  துப்பரவு செய்யும் பணியில் உரிமையாளர்  ஈடுபட்டிருந்தார்.

இதன் போது துப்பரவு செய்யும் பணிக்காக  கூலித்தொழிலுக்கு வந்திருந்த நபர் ஒருவர் தென்னங்குவியலுக்கு மேல் போடப்பட்டிருந்த தகரப்பேணி ஒன்றினை எடுத்து பார்த்துள்ளார். 

அதற்குள் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு சில நகைகள் வைக்கப்பட்டு வீசப்பட்பட்டிருந்தது. இந்நிலையில்   சம்பவம் தொடர்பில் அறிந்த காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் எம்.ஆர்.றஞ்ஜித் மாசிங்க  ஸ்தலத்திற்கு சென்று  விசாரணைகளை மேற்கொண்டார். 

மேலதிக விசாரணைகளுக்காக மோப்பநாயின் உதவியும் வேண்டப்பட்டிருந்தது. அத்துடன் கைவிரல் அடையாளங்களை பரிசோதணை செய்யும் அதிகாரிகள் வருகை தந்து பரிசோதனை மேற்கொண்டதுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் பதிவு செய்யப்பட்டிருந்த கைவிரல் அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதன் போது குறிப்பிடத்தக்க சில நகைகளே மீட்கப்பட்டுள்ளதாகவும்  கொள்ளையடிக்கப்பட்டிருந்த 16இலட்சம் ரூபா பணம் இன்னும்  கிடைக்க பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.