லுங்கி டான்ஸ் எல்லாம் பழசு, வேட்டி டான்ஸ்தா புதுசு: தல தோனியின் மரண மாஸ் விளம்பரம்

பாலிவுட் தாதா ஷாரூக் கானால் பிரபலமான லுங்கி டான்சை ஓரம் கட்டும் வகையில் கூல் கேப்டன் தல தோனி ஆடியுள்ள வேட்டி டான்ஸ் பட்டி தொட்டியெங்கும் படு வைரலாகப் பரவி வருகிறது.

பொங்கலுக்கு புதிதாக அறிமுகமாகியுள்ள டி.வி.எஸ் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக் விளம்பரத்திற்காக இந்தி திரையுலகைக் கலக்கி வரும் பிரபு தேவாவுடன் இணைந்து தோனி ஆடியுள்ள இந்த வேட்டி டான்ஸ் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஹிட்டாகி வருகிறது.