தனுஷுக்கு வில்லியாக நடிக்கும் திரிஷா

தனுஷ் தற்போது, இரண்டு படங்களில் நடத்து வருகிறார். அடுத்து துரை செந்தில் இயக்கத்தில் ‘கொடி’ படத்தில் நடிக்கிறார்.

இது அரசியல் தொடர்பான கதை இதில் ஷாமிலி, திரிஷா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ஷாமிலி நடிக்க இருக்கிறார். திரிஷா வில்லத்தனம் கலந்த வித்தியாசமான வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

கடந்த 13 ஆண்டுளாக திரை உலகில் முன்னணி நாயகியாக இருந்து வரும் திரிஷா, முதன் முறையாக தனுசுடன் இந்த படத்தில் நடிக்கிறார். வித்தியாசமான வேடம் என்பதால் திரிஷா விருப்பமுடன் இதில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

‘கொடி’ படத்திற்கு முதலில் அனிருத் இசை அமைப்பதாக இருந்தது. இப்போது சந்தோஷ் நாராயண் இசை அமைக்க இருக்கிறார். தனுஷ் படங்களுக்கும் வேல்ராஜ் இயக்கம் படங்களுக்கும் அனிருத் தொடர்ந்து இசை அமைத்து வந்தார். தற்போது ‘பீப்’ பாடல் விவகாரம் காரணமாக அவரை மாற்றி விட்டு சந்தோஷ் நாராயண் இசை அமைக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.