யாழ்-கொழும்பு பேருந்துகள் பயணிகள் மீது வைக்கும் அக்கறை இதுதானா?

அன்னை முத்துமாரி பேருந்தில் கொழும்பிலிருந்து  யாழ் நோக்கி பயணிக்கும் பயணிகள் இரவு உணவுக்காக  சிலாபம் வீதி நீர்கொழும்பிலுள்ள அல்-மாறா உணவகத்தில் நிறுத்தப்படுகின்றார்கள். அங்கு சாதாரண கோழி  இறைச்சி கொத்து ரொட்டி ரூபா 400 க்கு அநியாயமான விலையில் விற்கப்படுகிறது. அத்துடன் அங்குள்ள கழிவறை நிலைமையினை கீழுள்ள படத்தில் காணலாம். அநியாய விலையில் உணவுகளை விற்பனை செய்வதுடன் சுகாதாரமற்ற  முறையில்  கழிவறை நிலைமை உள்ளது. அத்துடன் இந்த வியபரநிலைய பெயர் விளம்பரத்தில் இது ஒரு வெதுப்பகம் எனவும் அடையாளபடுத்தப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. நீர்கொழும்பு சுகாதார பரிசோதகருக்கு இது குறித்த அக்கறை உள்ளது போல் தெரியவில்லை. இவ்வாறான உணவு விற்பனைக்கு ஒரு விலை நிர்ணயம் செய்ய அரசாங்கம் ஏன் இன்னும் முன்வரவில்லை என்பது தெரியவில்லை.

இவ்வாறான விலை நிர்ணயம் அமுலுக்கு வரும்வரை பயணிகளுக்கு விமோசனம் வராது என்பது திண்ணம்.

அன்னை முத்துமாரி பேருந்து நிர்வாகம் தொடர்ந்து இவ்வாறன உணவகத்தில் ஏன் தொடர்ந்து  இரவு உணவுக்காக  நிறுத்துகின்றார்கள் ? இவர்களுக்கு தேவை பயணிகளின் காசு மட்டுமா? பயணிகளின் நலனைபற்றி இவர்கள் ஒரு போதும் அக்கறை எடுப்பதாக தெரியவில்லை. பயணிகளின் நலனைபற்றி எந்தவித அக்கறையும் எடுக்காத பேருந்துகளில் பயணம் செய்வதில் உயிருக்கு உத்தரவாதமும் இல்லை. 

கூடுதலாக பெண்களே பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதால், யாழ் கொழும்பு A/C பஸ்களில் பயணிக்கின்றனர். 1300/- வாங்கும் இவர்கள், எந்த வித அக்கறையும் இல்லாமல், சரியான கழிவறைவசதி இல்லாத, இரண்டு மடங்கு விலையில் விற்கும்  உணவகங்களில் பேருந்துகளை நிறுத்தி ஓட்டுநரும், நடத்துனரும் தங்கள் சாப்பாட்டிற்காகவும் கைக்காசிற்காகவும் பயணிகளை பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாக்குகின்றனர்.

நான் அன்னை முத்துமாரி பேருந்தில் பயணித்ததால் வேறு எந்தெந்த  பேருந்துகள் இங்கே இவ்வாறாக  நிறுத்தப்படுகின்றது என்பது தெரியவில்லை.  

இதற்கு  யார் பொறுப்பேற்பது ????????? 

-Kunalan Kandiah

ஏனைய பேருந்துகள் நிறுத்தும் உணவகங்களின் சுத்தம், விலைபட்டி, கழிவறை வசதி/ நிலைமை என்பன வெகுவிரைவில் வெளியிடப்படும் 

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசெளகரியகளை கீழே கருத்தில் தெரிவிக்கலாம்.