தமிழில் டப் ஆகும் ரவிதேஜா படம்

சமீபகாலமாக தெலுங்கில் வெளியாகி பெரிய ஹிட்டாகிய படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்து வசூலை வாரிக்குவித்து வருகின்றன. மகேஷ்பாபு நடித்த ‘செல்வந்தன்’, ‘இதுதாண்டா போலீஸ்’ ஆகிய படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்து வசூலை வாரிக்குவித்துள்ளன.

அந்த வரிசையில் தற்போது தெலுங்கில் ரவிதேஜா நடித்து வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற ‘பழுப்பு’ என்ற படம் தமிழில் ‘எவன்டா’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவரவிருக்கிறது. இப்படத்தை பத்ரகாளி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாத் தயாரித்து வெளியிடுகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அஞ்சலி நடித்துள்ளனர். மற்றும் பிரகாஷ்ராஜ், நாசர், பிரம்மானந்தா, ஆதித்யா மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ராய் லட்சுமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை ராஜாராஜா என்பவர் இயக்கியுள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைக்க, வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலாட்டா படம். காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்து உருவான இப்படம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களையும் கவரும் என படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.