யன்னல் ஊடாக புகுந்து நள்ளிரவில் திருட்டு!

குளியலறை யன்னல் கம்பியை வளைத்து உட்புகுந்து மூன்றரைப் பவுண் நகை மற்றும் 13 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆறுகால் மடம் பழம் வீதியில் நேற்று முன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டில் அனைவரும் உறக்கத்தில் இருந்த வேளை இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

 

இதன்போது ஒன்றரைப் பவுண் சங்கிலி, 2 பவுண் காப்பு உட்பட 3 பவுண் நகைகளும், கைப்பையில் இருந்த 13 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.