தங்கையைக் கேலி செய்தவனை தட்டிக் கேட்ட அண்ணன்கள் மீது கத்திக் குத்து!

தங்கையை கிண்டல் செய்த நபரினை தட்டிக்கேட்ட வேளை கத்திக் குத்துக்கு இழக்கான அண்ணன், தம்பி இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றுக்காலை 9.15 மணியிளவில் புத்தூர் மருதடி வடக்கில் இடம்பெற்றது . இதில் அதேயிடத்தைச் சேர்ந்த மாணிக்கம் மலரவன் (வயது-21), மாணிக்கம் மதுசன்

வயது 19) என்ற அண்ணன், தம்பியரே  இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக தமது தங்கையை கேலி கிண்டல் செய்து வந்த மேற்படி நபரிடம் அண்ணன் தம்பி ஆகிய இருவரும் இது தொடர்பில் விசாரிப்பதற்காக அந் நபரது வீட்டுக்கு நேற்று சென்றவேளை அங்கு மூண்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.

அவ்வேளை தொல்லை கொடுத்த நபர் திடீரென கத்தி ஒன்றை எடுத்து சகோதரர்கள் இருவர் மீதும் தாறு மாறாகக் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

கத்தியால் குத்திய நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரைத் தேடி வருகின்றனர்.