புதன்கிழமைகளில் ஆளுநரைச் சந்திக்கலாம்

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேவை ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் பொதுமக்கள் சந்தித்து தமது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி புதன்கிழமை முதல் இது நடைமுறைக்கு வருகின்றது.

வடமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இன மற்றும் மத பேதமின்றி ஆளுனரைச் சந்தித்து கலந்துரையாட முடியும் என ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.