கலாச்சாரத்திற்கு அத்திவாரம் யாழ் பல்கலையில் ஆரம்பம்! உடைகளுக்கு வெள்ளி முதல் கட்டுப்பாடு

யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு ஒழுங்கு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மாணவர்கள் மற்றும் கல்வி சார் உத்தியோகஸ்தர்கள் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.

தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. ஆகிய கட்டுப்பாடுகள் புதிதாக அறிமுகப்படுத்த ப்பட்டு உள்ளன.

யாழ்.பல்கலைகழக பேரவையின் அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து மாணவர்களினதும் உடை ஒழுங்குகள் பற்றி கடந்த 16ம்  திகதி துறை தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தில் ஆராயப்பட்டு குறித்த ஒழுங்கு விதிகள் கட்டுப்பாடுகள் விதிப்பதென தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.