தம்பியாருடன் தகராறு!! தீக் குளித்து இளம் பெண் தற்கொலை

தனக்கு தானே மண்ணெண்னை ஊற்றி தீ மூட்டிய இளம் பெண் ஒரு வார காலத்தின் பின்னர் சிகிச்சை பயணளிக்காத நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மரணத்தை தழுவிக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டை வீதியைச் சேர்ந்த மருதை மேனகா வயது 30 என்பவரே மரணம் அடைந்தவராவார்.

கடந்த 17 ம் திகதி தம்பியாருக்கும் இவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாய்த்தர்க்கம் இடம்பெற்றதாகவும் இதனைத் தொடர்ந்து இவர் தனக்கு தானே தீ மூட்டியுள்ளார்.

தீயை அணைத்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணையை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம் குமாரினால் மேற்க் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.