மனைவியை இழந்த சோகம்! முதியவர் துாக்கில் தொங்கினார்

மனைவி இறந்த நாள் முதல் கடந்த இரண்டு வருடங்களாக தானும் இறக்க வேண்டும் எனக் கூறி வந்த முதியவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தன்து வீட்டின் பின்புறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காரைநகர் அல்வின் வீதியில் இடம்பெற்றுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான வேலன் முருகேசு (68 வயது) என்பவரே இவ்வாறு மரணம் அடைந்தவராவார்.

உடனடியாக காரைநகர் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்ட இவர் இங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்த வரப்பட்டு போதிலும் அவருடைய உயிர்
பிரிந்துள்ளது.

நீதிமன்ற பணிப்புரைக்கு அமைவாக இன்ற புதன்கிழமை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாரினால் இடம்பெற்ற மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் பிள்ளைகளிடம்
கையளிக்கப்பட்டுள்ளது;.

ஊர்காவற்துறை பொலிசார் விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளனர்.