யாழில் இளம் பெண் தீ மூட்டி தற்கொலை

தனக்கு தானே மண்ணெண்னை ஊற்றி தீ மூட்டிய இளம் பெண், ஒரு வார காலத்தின் பின்பு சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - ஈச்சமோட்டை வீதியைச் சேர்ந்த மருதை மேனகா (30) என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

இவருக்கும் இவரது சகோதரனுக்குமிடையில் கடந்த 17ஆம் திகதி கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக வாய்த்தர்க்கம் இடம் பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து இவர் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

சம்பவத்தை தொடர்ந்து, அவர் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற பணிப்புரைக்கு அமைய மரண விசாரணை நமசிவாயம் பிரேம் குமாரினால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.