கோப்பாய், நீர்வேலியில் கொள்ளையடித்தவர்கள் என சந்தேகத்தில் 4 பேர் பொலிசாரால் கைது

கோப்பாய், நீர்வேலி பகுதியில் கடந்த 20ஆம் திகதி அதிகாலை, ஏழு வீடுகளில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு சந்தேக நபர்களை இன்று கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கோண்டாவில், திருநெல்வேலி மற்றும் உரும்பிராய் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சனிக்கிழமை (20) அதிகாலை வேளையில், கூரிய ஆயுதங்களுடன் வீடுகளுக்குள் நுழைந்த கும்பலொன்று, வீட்டிலிருந்தவர்களை மிரட்டி 50 பவுண் நகை மற்றும் 25 இலட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.