சுதந்திரமாகவும் நியாயமாகவும் நீதியை வழங்கி வருகிறோம்! - நீதிபதி இளஞ்செழியன்

சமூகமானது பாதுகாக்கப்பட வேண்டியது அதற்காகநாங்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நீதியினை வழங்கிவருகின்றோம் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக சட்டத்துறையின் 10 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு “தசவிழா” நேற்றையதினம் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

யாழ்.பல்கலைக்களகமானது ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா, திருச்செல்வம் போன்ற பல சிறந்த சட்டவாளர்களை உருவாக்கியுள்ளதுடன் எதிர்காலத்திலும் சிறந்த சட்டவாளர்களை உருவாக்குவதற்கான வளவாளர்களை கொண்டுள்ளது.

யாழ்.பல்கலைகழகத்தில் கடந்த பத்து வருடங்களாக ஒரு பிரிவாக இயங்கி வருகின்ற சட்டப் பிரிவை இன்னும் ஓரிரண்டு வருடங்களில் முழுமையான ஒரு சட்டப் பீடமாக மாற்ற வேண்டும்.அதற்கு உதவுவதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

பல்கலைகழகமாணவர்கள் நீதிமன்றங்களுக்குசெல்வதையோஅல்லதுசிறையில் இருப்பதையோ நாங்களும் பல்கலைகழக நிர்வாகமும் விரும்பவில்லை.குறிப்பாக பல்கலைகழங்களில் இடம்பெறும் முரண்பாடுகளின் போது இறுதி கட்டமாகவே பல்கலை நிர்வாகம் பொலிஸாரின் உதவியை நாடுகின்றது.

அதிலும் குறிப்பாக மாணவர்களால் பகிடிவதை செய்ப்படுவதனை குறிப்பிடலாம். எமது காலத்தில் பல்கலைகழகங்களில் பகிடிவதை செய்வது சட்டவிரோதமானதாக இருக்கவில்லை. ஆனால் தற்போது அது சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அத்துடன் மாணவர்களுடைய கல்வி தேவைக்காக அரசாங்கம் மகாபோல உதவி திட்டத்தை வழங்கி வருகின்றது. அந்தப் பணத்தை சில மாணவர்கள் தவறான தேவைக்காகவும் பயன்படுத்துகிறார்கள். எனவே இது போன்றசெயற்பாடுகள் தவிர்க்ப்பட்ட வேண்டும் அத்துடன் இவ்வாறான நிலமைகளை உணர்ந்து மாணவர்கள் செயற்பட வேண்டும்.

தற்போது எமது சமூகத்தில் போதைப் பொருள் பாவனை, சிறுவர், பெண்கள் துஸ்பிரயோகங்கள், ஆயுதக் கலாச்சாரங்கள் போன்றன காணப்படுகின்றன. ஆனால் இவை தற்போது எம்மால் ஓரளவு கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறிப்பாக கேரள கஞ்சா வியாபாரம் சகல பிரதேசங்களிலுமுள்ள நீதிமன்ற நீதிவான்களுடைய முயற்சியினால் குறைக்கப்படடுள்ளது.

சமீபத்தில் கோப்பாய் பகுதியில் தொடர் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந் நிலையில் இதனோடு தொடர்புபட்ட குற்றவாளிகள் விரைவில் இனங்கானப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.

அத்துடன் எமது சமூகமானது பாதுகாக்கப்பட வேண்டியது. அதற்காக நாங்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நீதியினை வழங்கிவருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.