யாழ் இணுவில் பகுதியில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்களைத் துரத்திச் சுட்டது பொலிஸ்

இணுவில் காரைக்கால் சிவன் கோவில் வீதிக்கு அருகில் நேற்றையதினம் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில்  ஆவா குழுவை சேர்ந்த ஒருவர் காலில் காயமடைந்ததுடன் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

நேற்று முன்தினம் கே.கே. எஸ் வீதி தாவடிப் பகுதியில்  6 மோட்டார் சைக்கிள்களில் முகத்தில் கருப்பு துணிகள் அணிந்தபடி வாளுடன்  வந்த சிலர் போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவர்களை தாக்குவதற்கும் சென்றுள்ளனர்.

குறித்த குழுவை சேர்ந்த 8 பேர் நேற்றையதினம் நன்பகல் ஒரு மணியளவில் இணுவில் காரைக்கால் சிவன் கோவிலுக்குமுன் உள்ள வீதியில் வாளுகளுடன் நின்றுள்ளனர். இதனை அவதானித்த பொதுமக்கள்  பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து பொலிசார் குறித்த இடத்துக்கு சிவில் உடையில் சென்று அவர்களை கைது செய்வதற்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த குழுவினர் தொலைபேசியூடாக கதைத்து தமது சகாக்களை குறித்த இடத்துக்கு வரவளைத்துள்ளனர்.  அந்த இடத்தில் கூட்டம் அதிகரித்து முறுகல் நிலை ஏற்படவே பொலிஸர் அவர்களைகைதுசெய்யமுற்பட்டுள்ளனர்.

அப்போது அவர்கள்  தப்பிசெல்ல முற்பட்ட வேளை அவர்களை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் அவர்கள்  மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அதில் ஒருவருக்கு காலில் சூடு பட்டிருந்தும் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். சிலர் அப்பகுதியில் உள்ள வீட்டுக்குள் ஓடி ஒளிந்துள்ளனா. அதில்  மூன்று பேரை  சுன்னாக பொலிஸார் கைது செய்துள்ளனர் என அப்பகுதியில் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்  தெரிவித்துள்ளனர் .

மேலும் இச் சம்பவத்தில் துப்பாக்கிபிரயோகம் மெற்கொள்ளப்பட்டவர்கள் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த ஆவா குழவை சேர்ந்தவர்கள் எனவும் அறிய முடிகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம்  பொலிஸாரை தொடர்பு கொண்ட போதும் சரியான தகவலை பெறமுடியவில்லை