சாவகச்சேரியில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் சாவகச்சேரி நுணாவில் இராசா கடைக்கு அருகிலுள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளது.

 விஜிதரன் யாழினி (வயது 35) என்பவரது சடலமே இதுவென அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். சடலம், தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.