யாழ்ப்பாணத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓடுபவர்களுக்கு கடும் தண்டனை

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மற்றும் ஓட்டுனர்;களுக்கு ஆகக்கூடியது 3 மாத விளக்கமறியலும் அபராதத்துடன் கூடிய 1 மாத கால சிறைத்தண்டனையும் வழங்குமாறு யாழ். மேல் நீதிமன்றத்துக்குட்பட்ட மாவட்ட நீதிமன்றங்களுக்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அறிவுறுத்தினார்.

இதேவேளை, விபத்தின் போது நபரொருவர் உயிரிழந்தார் எனின், அவ்விபத்தை ஏற்படுத்தியவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்படும்.

மேலும், மதுபோதையில் வாகனம் செலுத்திய வழக்குகள் தொடர்பில் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்யும் பிணை மனுக் கோரிக்கைகள், இனிவரும் காலங்களில் பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

யாழ்.குடா நாட்டில் அதிகரித்து வரும்; விபத்துக்களுக்கு அதிகளவான காரணங்;கள், மதுபோதையில் வாகனங்கள் செலுத்துவதாலேயே என கண்டறியப்பட்டுள்ளன.

விபத்திலிருந்து அனைவரையும் பாதுகாக்க சட்டங்கள் இறுக்கமானதாக இருக்க வேண்டும் என கருதிய மேல் நீதிமன்ற நீதிபதி, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்;களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க பரிந்துரை செய்தார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு அபராதம் மாத்திரம் விதிக்கப்படுவதால், அவர்;கள் மீண்டும் அதே குற்றத்தை செய்கின்றனர். இதனைக் கருத்திற்கொண்டே தற்போது இவ்வாறான சாரதிகளுக்கு சிறைத்தண்டனை, அபராதம், சமுதாய சீர்திருத்தம் மற்றும் மதுவெறுப்பு சிகிச்சை என்பன மாவட்ட நீதிமன்றங்களினால் பரிந்துரைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.