யாழ் கோட்டைப் பகுதியில் வறுமை காரணமாக சிறுவர் துஸ்பிரயோகம்!! அதிகாரிகள் அசமந்தம்

யாழ்ப்பாணம் கோட்டைப்பகுதி உள்புறமும் வெளிப்புறமும்  பச்சிளம் சிறுவர்கள் விற்பனையில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்கள் தமது பெற்றோர்களின் வழிநடத்தலில் செயற்பட்டுவருகின்றனர். பாடசாலைக்கு சென்று  கல்வி கற்றலை முடித்துக்கொண்டு தமது குடும்பத்தாருடன் சிறிய பொருட்களை மாலை நேரத்தில் விற்பனை செய்துவருகின்றனர்.

வடக்கு கிழக்கில் கடந்த கால கோர யுத்தம் பொது மக்கள் மத்தியில் கசப்பான சிந்தனைகளை தோற்றுவித்ததோடும்  தற்போது  யுத்தம் நிறைவடைந்த நிலையிலும்  மக்களின் இயல்வு வாழ்க்கையில் பெரிதளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை. தமது சொந்த இடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டு  அகதிகளாகவும் வேறு இடங்களில் தஞ்சம்புகுந்து வாழ்ந்து வருகின்றவர்கள் தமது வறுமையை போக்க வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை  பெற்றோர்கள் மட்டுமில்லாது கல்வி கற்றலில் மற்றும் சமூக பாண்புகளில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது  ஒரு பிள்ளையை ஒழுக்கங்கள் நிறைந்த மாணவனாகவும் எதிர்காலத்தில் நற்பிரஜை ஆக்கவேண்டியதும் இவர்கள் கையில் தான் இருக்கின்றது. குறிப்பாக பொற்றோர்கள் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டும் வளமான சமூகத்தை கட்டி எழுப்பவும்  ஆர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்...

தற்போது மலர்ந்திருக்கும் நல்லாட்சி அரசாங்கம்  மற்றும் உரிய அதிகாரிகள் சிறுவர்கள் விடயங்களை கவனத்தில் எடுத்து  சிறுவர் குடும்பங்களின் எதிர்கால நலனுக்காக சிறப்பான முறையில் வாழ்வாதார  தொழில்  வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவும் முன்வரவேண்டும்.

சிறுவர்கள் எதிர்காலத்தின்  இலட்சிய விழுதுகள்........


தங்கராசா ஷாமிலன்...