நாளை யாழ்ப்பாணம் வரவுள்ளார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நாளை மறுதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஜேர்மன் மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி, இன்று சனிக்கிழமை இரவு நாடு திரும்பும் அதேவேளை யாழ்ப்பாணத்திற்காக விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றிலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.