போதைப் பொருள் கடத்தலின் மையப்பகுதியாக மாறியது யாழ்ப்பாணம்!

யாழ்.பண்ணைப்  பகுதியில் 13 பொதிகளில் வைக்கப்பட்ட 26 கிலோ நிறையுடைய கேரள கஞ்சாவுடன் 3 சந்தேக நபர்களை யாழ். பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வுதுறை பொலிஸார் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நேற்றுமுன்தினம் மாலை 8.30 மணிய ளவில் யாழ்.பண்ணைப் பகுதியில் 26 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் 3 நபர்கள் குறி த்த கஞ்சா பொதிகளை கை மாற்றுவதற்காக நின்றிருந்த நிலையில், புலனாய்வுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இரு ந்து 26கிலோ கஞ்சா மற்றும் 3 கைத்தொலை பேசிகள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா பல இலட்சம் ரூபா பெறுமதி உடையது எனவும், சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் விலை உயர்ந்தவை என வும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் முல்லைத்தீவினை சேர்ந்தவர்கள் எனவும் மற்றும் ஒருவர் பருத்தித்துறையை சேர்ந்தவர் எனவும் இவர்களில் ஒருவர் பிரா ன்ஸ் நாட்டின் பிரஜா உரிமை பெற்றுள்ளார் எனவும் தெரிய வந்துள்ளதாக வூட்லர் தெரி வித்தார். இக்கேரள கஞ்சா மிகவும் பெறுமதி வாய்ந்தது எனவும், இது தொடர்பான விசார ணைகளை தாம் முன்னெடுத்துள்ளதாக வும் அவர் கூறினார்,

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவ ரும் யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ள தாகவும் மற்றும் கஞ்சா பொதிகள் பதின் மூன்றும், மோட்டார் சைக்கிள் மூன்றும் நீதி மன்றில் பாரப்படுத்தவுள்ளதாகவும் கூறினார். கைது செய்து செய்யப்பட்ட மூவரும் இளை ஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது போதைப் பொருள் கடத்தலின் முக்கிய கேந்திரநிலையமாக யாழ்ப்பாணம் மாறியுள்ளதாக பொலிஸ்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.