ஜீரணசக்தியைக் கொடுக்கும் ஆனைக் குன்றிமணி

மருத்துவப் பயன்கள் : முடக்கு வாதம், வாத நோய்கள் மற்றும் சிறுநீரில் காணும் இரத்தம் நீங்கும். வேர் வாந்தியை உண்டாக்கும். அனைக் குன்றிமணியின் கொழுந்து இலைகளை உணவாக கீரையாகச் சாப்பிடலாம். விதையிலிருந்து எண்ணெய் எடுத்து அதில் புரோட்டின் கொழுப்பு இருப்பதால் விரைவான ஜீரணசக்தியைக் கொடுக்கும்.

மரம் விரகுக்காகவும், பர்னீச்சர் செய்யவும், தரைக்குப் போடவும், வீடு கட்டவும் பயன் படுத்துகிறார்கள். படகுகள் கட்டவும் பயன் படுத்துகிறார்கள். அதன் சேகு சிகப்புச்சாயம், துணி உண்டாக்கவும் பயன்படுத்துகிறார்கள். சுத்தி செய்யாத விதை நச்சாகும். மரப்பட்டைத் தூள் எடுத்து தண்ணீரில் கலந்து தலைவலிக்கும், வயித்துக் கடுப்பு, வயித்துப் போக்குக்குப் பயன்படுத்துவார்கள்.

பட்டை மற்றும் இலையில் தயார் செய்த கசாயம் மேலை கண்ட நோய்க்குப் பயன்படுத்துவார்கள். சிகப்பு விதை பொம்மைகள் செய்யவும் தங்க நகைகளில் சேர்க்கவும் பயன்படுத்துகிறார்கள்.