வித்தியா கொலை வழக்குத் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு நீதவான் கடும் தொனியில் உத்தரவு

புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினரால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் கடும் தொனியில் உத்தரவு இட்டுள்ளார்.

 புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதாவன் நீதிமன்றில் நீதவான் எச்.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

 அதன் போது குற்றப்புலனாய்வு துறையினரால் மரபணு சோதனை அறிக்கை உட்பட எந்த அறிக்கையும் மன்றில் சமர்பிக்கவில்லை.

 மன்றில் அறிக்கை எதுவும் சமர்பிக்கபடாததால், விசாரணைகளை மேற்கொள்ள முடியாது வழக்கு தவணைகள் தள்ளி போய்க் கொண்டு இருக்கின்றன.

 இதனால் மக்கள் நீதிமன்றின் மீது அதிருப்தி கொள்ள நேரிடலாம். ஆகையால் இதுவரை இந்த வழக்கு தொடர்பில் குற்றபுலனாய்வு துறையினர் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கைகளை அடுத்த தவணையில் மன்றில் சமர்பிக்க வேண்டும் என கடும் தொனியில் உத்தரவு இட்டார்.

 அதனை தொடர்ந்து சந்தேக நபர்கள் பத்து பேரையும் எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.