உங்களை லைன்ல விட்டு சுட வேணும்! சுன்னாகம் இளைஞர்களின் ஆவேசம்

எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை அமர்வுக்கு செல்லும் வடக்கு முதலமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோர் மீது கழிவு ஒயில் வீசுவதற்கு சுமந்திரன் ஆதரவு வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலர்

முயற்சித்து வருகின்றதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்  வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இருவரின் ஏற்பாட்டில் முன்னாள் பிரதேசசபை உறுப்பர்கள் சிலர் சுன்னாகம் பகுதியைச் சனசமூகநிலைய விளையாட்டுக் கழக இளைஞர்கள் சிலரை  அழைத்த அவர்களிடம், வடக்கு மாகாணசபை அமர்வில் கலந்து கொள்ள வரும் முதலமைச்சர், ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துமாறு தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்கள் மீது அங்கு வைத்து கழிவு எண்ணை ஊற்றுமாறும் கேட்டுள்ளனர்.

அத்துடன் இதற்கான நன்றிக்கடனாக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு கழகத்திற்கு நிதியுதவி போன்றவை செய்து தருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக குறித்த கழக இளைஞர்கள் தங்களது கழக அங்கத்தவர்களுடன் கலந்தாலோசித்து பதில் சொல்வதாக தெரிவித்து சென்றனர். நேற்று மாலை குறித்த கழக இளைஞர்களுடன் வேறு சில இளைஞர்களும் கழிவு ஓயில் வீசுவதற்கு ஏற்பாடு செய்த உறுப்பினர்களைச் சந்தித்துள்ளனர். சந்திப்பின் போது அங்கு பெரும் காரசாரமான கருத்து மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

அங்கு நின்ற விளையாட்டு உறுப்பினர்களிடம் ‘நீங்கள் கொஞ்சப் பேர் அங்கு வந்து சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று மற்றவர்களுக்கு காட்டினால் சரி, எங்கள் பெடியலும் வந்து நிற்பாங்கள், அவங்கள் ஒயிலடிப்பாங்கள்‘ என்று ஒரு உறுப்பினர் கூறியுள்ளார்.

இதனால் கொதிப்படைந்த விளையாட்டு கழக உறுப்பினர்கள ‘உங்கள் உட்கட்சி மோதலுக்கு எங்களைப் பகடைக்காயாகப் பாவிக்க முற்படுகின்றீர்களா? கழிவு ஒயில் ஊற்றுவது என்றால் முதலமைச்சருக்கும் விவசாய அமைச்சரு்ககும் மட்டுமல்ல ஆளும் கட்சியைச் சேர்ந்த எல்லோருக்கும் ஊற்ற வேண்டும், உங்களை நாங்கள் வாக்குப் போட்டு மாகாணசபைக்கு அனுப்பியது உட்கட்சி மோதலைப் பார்த்து ரசிப்பதற்காக அல்ல, நீங்கள் ஆட்களை வைத்து இவ்வாறான செயற்பாடுகளைச் செய்துவிட்டு எங்களையும் பழிச் சொல்லுக்கு உட்படுத்த முனைவீர்கள், இயக்கம் இருந்திருந்தால் உங்களை நிரையில் விட்டு சுட்டிருக்கும்‘  என கடும் சீற்றத்தில் இளைஞர்கள் கூறியதாகவும் இளைஞர்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே வேளை இவர்களின் சந்திப்பை ஒழுங்கு செய்த முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள் இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என இளைஞர்களைக் கெஞ்சிக் கேட்டதாகவும் குறித்த இளைஞர்களின் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.