தனியார் பஸ் நடத்துனரின் கொடூரச் செயல் மாணவனை படுகாயமாக்கியது

 தனியார் பஸ் நடத்துனரின் பொறுப்பற்ற செயலால், பாடசாலை மாணவன்  படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வியாழக்கிழமை (18) அனுமதிக்கப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்திரன் அவித்தனன் (வயது 15) என்ற மாணவனே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

நெல்லியடியில் இருந்து குஞ்சர் கடை பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு பயணித்த மாணவனை பஸ்ஸை நிறுத்தாது ஓட ஓட இறக்கி விட்டுள்ளார்.

நிலை தடுமாறி விழுந்த மாணவனை மீட்ட பொதுமக்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவத்தடன் தொடர்புடைய பஸ் சாரதியையும் நடத்துனரையும் கைது செய்ய நெல்லியடி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.