கச்சதீவு திருவிழாவிற்கு சுமார் 4000 இந்தியர்கள் வருகை

கச்சதீவு திருவிழாவிற்காக சுமார் 4000 இந்தியர்கள் வருகை தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கச்சதீவு திருவிழா இம்மாதம் 21 ஆம் திகதி நடைபெறுவதற்கு இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய பக்தர்கள் தவிர சுமார் 4000 இலங்கை பக்தர்களும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இம்முறை கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழ்நாட்டு மீனவர்கள் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கச்சத்தீவு திருவிழா நிறைவு பெறும் வரையில் கச்சத்தீவை அண்மித்த வடபகுதி கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.