சிலை சர்ச்சையில் ஒரு கல்லூரி

சிலை சர்ச்சையில் ஒரு கல்லூரி

கல்வியல் கல்லூரி ஒன்றில் சிலை ஒன்றை வடித்து அதனை பொது இடத்தில் நிறுவி திறந்து வைத்து பாதுகாத்து வந்தால் அவர்களைப் பாராட்டலாம். சிலை ஒன்றை வடித்து பொது இடத்தில் நிறுவி அதனைத் திறந்து வைத்து விட்டு பின்னர் அதனைக் கிளப்பி வேறு இடத்தில் வைத்து விட்டு அந்த இடத்தில் வேறு சிலையை வைப்பவர்களை என்னவென்று சொல்ல முடியும். இது சம்பந்தமான பிரச்சினை ஒன்று ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கல்லூரியில் பயிற்சி ஆசிரியர் ஒருவரால் வடிக்கப்பட்டு நிறுவப்பட்ட சிலை ஒன்றை அகற்றி ஒதுக்குப் புறத்தில் வைத்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு சிலையை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார் முதல்வர். சிலை நிறுவப்பட்ட போது இவர் கடமையில் இருக்கவில்லை. பிறகு தான் நியமனம் பெற்று வந்தவர். கல்லூரியில் இவருக்கு நல்லபெயர் இல்லாததால் சிலை ஒன்றையாவது அமைத்து இவர் காலத்தில் தனது பெயரைஅதில் எழுதி வைத்தால் என்றைக்குமே தனது பெயர் கல்லூரியில் அழியாமல் வாழும் என்று நினைக்கிறார். அதுமட்டுமல்ல முன்னர் இருந்த முதல்வர் பணத்தை சுருட்டிக் கொண்டு போனது போல் தானும் இதன் மூலம் பயிற்சி ஆசிரியர்களிடம் பணத்தை சேகரித்து மிகுதியை சுருட்டலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது என்று ஆசிரியர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

ஒரு சாராயக்கடை வைத்திருக்கும் ஒருவரின் மகள் இங்கே பயிற்சி எடு;த்து வருகிறார். இவரிடமிருந்து 2 இலட்சம் வாங்கியதாக ஆதாரம் இல்லாத செய்திகள் உலாவுகின்றன என்றால் ஏனையவர்களிடம் சேகரித்த பணம் எவ்வளவு என்று தெரியாமல் இருக்கிறது.

இந்தசம்பவம் இப்படி இருக்க மேலும் பல நடக்கக்கூடாத சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இது சம்பந்தமாக அறிவதற்காக பலருடன் கதைத்தோம் அதாவது அங்கு பணியாற்றுபவர்கள் தொடக்கம் ஆசிரியர்கள் வரை துருவினோம். பலர் சொல்லப் பயந்தார்கள் சிலர் நாங்கள் ஆம் என்றால் அவர்கள் இல்லை என்றும் நாங்கள் இல்லை என்றால் அவர்கள் ஆம் என்றும் நாசுக்காக பதில் சொல்லி தம்மை தப்பிக்க வைப்பதிலே குறியாக இருந்தார்கள்.

ஒருவர் மட்டும் அங்கு நடப்பதை ஒழிவு மறைவின்றிச் சொன்னார். ஆனால் தனது பெயரையோ பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னதைப் பார்க்கின்ற போது நாமும் கேள்விப்பட்டதும் ஒன்றுதான்.

கல்லூரியின் விரிவுரையாளர்கள் வீட்டுக்குச் செல்லவேண்டும். ஆனால் 4 மணியிலிருந்து இரவு 8மணி வரை கல்லூரி நூலகத்தில் பணியாற்றுமாறு 15 பெண் விரிவுரையாளர்களுக்கு முதல்வரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 5 ஆம் திகதி வரை இவர்கள் சிரமத்தின் மத்தியில் பணியாற்றியுள்ளனர். மனித உரிமைக்கு மீறின செயல் என்று தெரிந்தும் வெளியில் சொல்ல முடியாது தமது தொழிலுக்கு பாதிப்பு வருமோ என்ற பயத்தில் பணியாற்றியுள்ளனர்.

200 பயிற்சிஆசிரியர்கள் இங்கு பயிற்சியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு மாதாந்தம் உணவு கொடுப்பனவுக்காக 3 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஒருவருக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு ஏற்றால் போல் உணவு வழங்கப்படுவதில்லை. சத்துள்ளஉணவுகளை வழங்காது அந்தப் பணத்தை மிச்சம் பிடித்தால் 200 பேரினது மிச்சமும் பெரிய ஒரு தொகையாகச் சேரும். இந்தக் கணக்கு எங்கு போகுமோ தெரியாது. ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

கல்லூரியின் தேவைக்கு கூடுதலான பணத்தை பயிற்சிஆசிரியர்களில் எவர் வழங்குகின்றார்களோ அவர்களுக்கென்று தேவைகள் நிறைவேற்றப்படுகின்றது. அதாவது எந்த நாள்களிலும் விடுமுறை எடுத்து வெளியில் செல்லமுடியும். பணம் கொடுக்க வசதியில்லாதவர்களை ஒதுக்கும் பழக்குமும் இங்குஉள்ளது.; ஒருபெண் விரிவுரையாளர் இங்கு கடமையில் இருந்து ஆதிக்கம் செலுத்துகின்றார். இவர் சொல்வதைத் தான் முதல்வரும் கேட்டு நடப்பார். இதனால் இவருக்கு ஏனைய பெண் விரிவுரையாளர்கள் பயத்தில் கட்டுப்பட்டு நடக்கின்றனர்.

கல்லூரியில் இரவுநேரத்தில் பணியாற்ற முடியாத பலபெண் விரிவுரையாளர்களில் ஒருபெண் விரிவுரையாளர் உயிரைக் கொல்லும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கணவனை இழந்து பிள்ளைகளுடன் தனிய வாழ்ந்து வருகின்றார். தன்னால் இரவில் பணியாற்ற முடியவில்லை என்று தெரிவித்த போது ஆதிக்கம் செலுத்தும் பெண் விரிவுரையாளரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

முதல்வருடன்ஆதிக்கம் செலுத்தும் பெண் விரிவுரையாளருடன் ஆண் விரிவுரையாளரான ஒருவரும் சேர்ந்து இந்தக் கல்லூரியை நாசம் செய்யப் பார்க்கிறார்கள். நான் தான் முதல்வன் நான் சொல்வதே சட்டம் என்று அடிக்கடி சொல்வதுண்டாம்.

மட்டக்களப்பில் இருந்து ஒவ்வொரு முறையும் இந்தக் கல்லூரியின் நேர்முகப் பரீட்சையை நடத்த வருபவர்களை இந்தப் பக்கமே வராமல் செய்த பெருமை முதல்வரைச் சேரும். அதாவது. அவர்கள் இங்கு வந்து நேர்முகப் பரீட்சையை நடத்துவதால் யாழ்ப்பாணத்தில் இருந்து நேர்முகப் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் அங்கு செல்லத் தேவையில்லை. முதல்வரால் கோபத்துக்குள்ளான அவர்கள் போன முறை மட்டக்களப்பிலும் வவுனியாவிலும் நேர்முகப் பரீட்சையை நடத்தியதால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்றனர். மட்டக்களப்பில் இருந்து அவர்கள் உணவு அருந்த கோப்பை கொண்டு வராததாலும் கல்லூரியில் மலசலகூடம் ஒன்றிற்கு கதவு இல்லை என்று சொன்னதாலும் கடுப்பாகிய முதல்வர் கதவில்லாமல் தான் நாங்கள் பயன்படுத்துகின்றோம் உங்களுக்கு பயன்படுத்த முடியாதா என்றும் அவர்களை விரக்தியடைய வைத்துள்ளார். பிறகு எப்படி அவர்கள் இந்தக் கல்லூரிக்கு வருவார்கள்.

சிலை சர்ச்சையில் ஒரு கல்லூரி

சிலை சர்ச்சையில் ஒரு கல்லூரி