சாவகச்சேரி நீதிமன்ற சாட்சிப் பொருட்கள் சேகரிக்கும் இடத்தில் தீ விபத்து! திட்டமிடப்பட்டதா?

சாவகச்சேரி நீதிமன்றத்தில் சான்று பொருட்கள் வைக்கும் களஞ்சிய அறையில் இருந்த அலைபேசியொன்று இன்று புதன்கிழமை (17) காலை வெடித்ததில் அறையினுள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் அருகிலிருந்த சான்றுப் பொருட்கள் உள்ளிட்ட சில பொருட்கள் தீயில் எரிந்து நாசமடைந்துள்ளன.

அலைபேசியின் மின்கலம் வெடித்து தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து, விரைந்து செயற்பட்ட நீதிமன்ற பணியாளர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதிக சேதங்கள் ஏற்படாமல் தடுத்தனர்.

இதே வேளை சாட்சிப் பொருட்களை அழித்து வழக்கை திசை திருப்பும் நடவடிக்கையாக இது இருக்கலாம் எனவும் சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் சிலர்  சந்தேகம் தெரிவிக்கின்றனர்.