சாமத்தியப்படும் சிறுமிகளை பட்டும் படாமல், தொட்டும் தொடாமல் முட்டி பார்க்கும் பட பிடிப்பாளர்கள்!

அந்த காலத்தில் ஒரு தமிழ் வாத்தியார் யாழ்ப்பாணத்தில் இருந்தார். இவருக்கு 03 பெண் பிள்ளைகள்.

ஆனால் அவர்கள் வயதுக்கு வந்தபோதெல்லாம் மனுசன் விழா எடுக்கவில்லை. சாமத்திய வீடு கொண்டாடவில்லை.

சொல்ல போனால் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்குகூட தெரிய வராமலேயே பிள்ளைகள் பக்குவப்பட்டபோது இரகசியம் காப்பாற்றி இருந்தார்.

இவரிடம் ஒரு நண்பர் இது குறித்து கேட்டு இருக்கின்றார்.

வீட்டில் வயதுக்கு வந்த பிள்ளை இருக்கிறாள் என்று சொல்லி ஆண்களை கேற்றுக்கு வர வைக்கிற வேலையை ஏன் செய்ய வேண்டும்? இது கூட்டி கொடுப்பதற்கு சமன் என்று கூறி இருக்கின்றார்.

புதிய கருத்து கணிப்பு ஒன்றின்படி தமிழ் சிறுமிகள் பெரும்பாலும் முதன்முதல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவது அவர்களுடைய சாமத்திய கொண்டாட்டத்தில்தான். உள்நாட்டில் மட்டும் அல்ல புலம்பெயர் தேசங்களிலும் இதுதான் நடக்கின்றது.

அம்மா, அப்பாவின் பண கொழுப்பை காட்டுகின்ற விழாவாக இது மாறி உள்ளது. விழாவின் மிக முக்கிய அம்சம் சாமத்திய பட்ட பிள்ளையை விதம் விதமாக புகைப்படங்கள் எடுப்பிப்பது. புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களுக்கு கொண்டாட்ட படங்களை அனுப்ப வேண்டிய தேவை உள்நாட்டவர்களுக்கு உள்ளது. அதே போல ஈழத்தில் உள்ள உறவுகளுக்கு அனுப்ப வேண்டிய தேவை புலம்பெயர் நாட்டு தமிழர்களுக்கு உள்ளது.

இதனால் இங்கெல்லாம் புகைப்பட பிடிப்பாளர் முக்கியத்துவம் பெறுகின்றார். சாமத்தியப்பட்ட பிள்ளையை புகைப்படங்கள் எடுக்கின்ற சாட்டில் கமராவால் மாத்திரம் அன்றி கண்களாலும் இவர் அளக்கின்றார். பிள்ளையை படங்கள் எடுப்பதற்கு வசதியாக அங்கங்களில் பட்டும் படாதபடி தொட்டும் தொடாதபடி கை வைக்கின்றார். பெரும்பாலும் மூடிய அறைக்குள் வைத்து கூடுதல் வேலைகளை செய்வார். ஸ்டூடியோவுக்கு கூட்டி சென்று படங்கள் படிக்கின்றபோது சிறுமி கூச்சப்படுகின்ற அளவுக்கு காரியங்கள் இருக்கும். ஆனால் வெட்கத்தில் வெளியில் சொல்வது இல்லை.

கனடாவில் இவ்வாறான ஒரு அனுபவத்துக்கு உள்ளான தமிழ் சிறுமி அவருக்கு நேர்ந்த அனுபவத்தை வெளிப்படுத்தியது அல்லாமல் இப்போது குழந்தை பருவ துஷ்பிரயோகங்களுக்கு எதிரான அமைப்பு ஒன்றை ரோரன்ரோவில் நடத்தி வருகின்றார்.

பிள்ளை பேற்றுக்காக மனைவியை ஆண் வைத்தியர்களிடம் அழைத்து செல்வதை ஒரு விடயமாகவே கணவன்கள் எண்ணுவதில்லை. இவ்வாறான ஒரு மனநிலைக்குதான் புகைப்பட பிடிப்பாளர் விடயத்தில் தமிழ் பெற்றோர் செல்கின்றனரா? என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது.

வெள்ளவத்தையில் வசிக்கின்ற யாழ்ப்பாண யுவதி ஒருவர் சந்தையில் வைத்தியர் ஒருவரை கண்டு உள்ளார்.

டாக்டர் என்னை தெரியவில்லையா? உங்களால்தான் நான் இன்றைக்கு நன்றாக உள்ளேன் .. என்று மிக சந்தோசமாக சொல்லி உள்ளார்.

ஆனால் டாக்டரோ உங்களை நான் முன்னுக்கு பின் பார்த்தது இல்லையே? என்று கூறி இருக்கின்றார்.

என்ன டாக்டர் என் முகம் உங்களுக்கு ஞாபகம் இல்லையா? எத்தனை தடவை கணவனுடன் வந்திருப்பேன் … நீங்கள்தானே செக் அப் எல்லாம் செய்தீர்கள் என்று பெண் பதிலுக்கு சொல்லி இருக்கின்றார்.

அம்மா எனக்கு உங்களுடைய முகம் ஞாபகம் இல்லை. ஆனால் கீழ் பகுதியை பார்த்தால் உங்களை ஞாபகம் வந்து விடும்… என்று அப்பாவித்தனமாகவோ இல்லை குறும்பாகவோ உண்மையை சொல்லி இருக்கின்றார். ஏனென்றால் அவர் மக பேற்று வைத்திய நிபுணர்.

கவனம். உங்கள் பெண் பிள்ளைகளுக்கு இவ்வாறான அனுபவம் கால போக்கில் சாமத்திய கொண்டாட்டத்தில் புகைப்படம் எடுக்கின்ற ஆளுடன் நேர்ந்தாலும் நேரலாம்.