யாழ்ப்பாணக் கள்ளு 1GB டவுண்லோட் செய்து பாவியுங்கள்!! பலன் பெறுங்கள்

பனை அல்லது தென்னை மரங்களின் பாளையினை வெட்டி அதிலிருந்து வடியும் பால் போன்ற திரவம் மண் பானைகளில் சேகரிக்கப்படுகிறது. இந்த பானம் புளிப்பு கலந்த சுவையுடன் உள்ளது. இதை அருந்துபவர்களுக்கு போதை ஏற்படுகிறது.

கள்ளு எல்லோரும் குடித்திருப்பீர்கள்_(ஒரு நம்பிக்கைதான்) தென்னைமரத்திலிருந்தும் பனைமரத்திலிருந்தும் இறக்கப்படும் மது பானம்.

புளிச்ச கள்ளு

கிராமத்தில் அநேகமாக அனைவரும் சேர்ந்து கள்ளு குடிக்க போவார்களாம். அவர்கள் வயல்வெளிவேலை முடித்து செல்லுவதற்கு நேரம் நண்பகல் ஆகிவிடுமாம்.அவர்கள் செல்லும்போது அவர்களுக்கு பெரிய செட் நண்பர்கள் எதிரில் வருவார்களாம். அவர்களைப்பார்த்து இவர்கள் பதுங்கி பதுங்கி செல்ல , யாராவது பார்த்துவிட்டு போங்கடா போங்க அங்க புளிச்சகள்ளுதான் இருக்கு என கிண்டல் பண்ணுவார்களாம்.இவர்களும் கிடைத்தது போதும் என புளித்த கள்ளையே குடித்துவிட்டு வருவார்களாம். (கள்ளு நேரம் ஆகஆக புளித்துவிடுமாம். ).

யாழ்ப்பாணம் என்பது இலங்கை தீவின் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமாகும். இதனுடைய கலாசாரங்கள, பண்பாடுகள், வாழ்கை கோலங்கள் யாவையுமே மாறுபட்டவை இவையே இன்று வரைக்கும் யாழ்ப்பாணத்தின் தனித்துவத்தினை பேணி பாதுகாக்கின்றன. என்று கூறலாம்.

யாழ்ப்பாணம் என்றதுமே அதனுடை அடையாளமாக அடையாளப்படுத்தப்படுவது பனை வளமே. இந்த பனை வளத்த்ல் இருந்து பெறப்படுவது கள்ளு. இதனுடைய முக்கியத்துவம் யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமல்ல தென் பகுதி மக்களுக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் அதி முக்கியத்துவமிக்க பானமாக உள்ளது.

யாழ்ப்பாண குடா நாடு இப்போது ஒரு சுற்றுலா தளமாக மாறிக்கொண்டு வருகின்றது. பல இடங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த இடமாக மாறி விட்டது. யாழ்ப்பாணத்தின் தொன்மைகள், அதனுடைய அழகை, உணவு முறைகளை அனுபவ ரீதியாக அனுபவிப்பதற்க்கு நாள் தோறும் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் அதிகம்.

யாழ்ப்பாண காலநிலையென்பது எப்போதும் ஒரு வெப்பமான காலநிலை. அந்த வெப்பமான காலநிலையில் வெப்பத்தன்மையினை குறைப்பதற்க்கு கணிசமான தென்னிலங்கை உல்லாச பயணிகள், இந்த குடாநாட்டின் தனித்துவமிக்க பானமான கள்ளினையே நாடுகின்றனர்.

யாழ்ப்பாண கள்ளினை ஆய்வுரீதியாக உட்படுத்திய போது இது ஒரு மதுபான வகையினை சார்ந்தது அல்ல என்றும் ஆனால் இது ஒரு மென் பான வகையினை சார்ந்தது. என்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

யாழ்ப்பாண கள்ளு பற்றி கீரிமலை கூவில் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியம் கூறும் போது…

1990 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் கீரிமலை கோவிலுக்கு வரும் உல்லாச பயணிகள் குறிப்பாக சிங்களவர்கள் இங்க வந்து கள்ளு வாங்கி குடிப்பாங்க அப்போதைய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இந்த கூவில் கிராமம் தான் கள்ளுக்கு பிரபல்யம் வாய்ந்தது. ஒரு நாளைக்கு 100 பேருக்கு மேல் வருவாங்க. இதைவிட யாழ்ப்பாணத்தில இருக்கிற எல்லா இடத்தில இருந்து அந்தியோட்டி கிரியை செய்வதற்க்காக கிரீமலை கோவிலுக்கு வருபர்கள் இங்க வந்து கள்ளு குடிச்சிற்று தான் போவாங்க. அன்றைய காலப்பகுதியில் ஒரு போத்தல் கள்ளின் விலை 15 ரூபா தான். கூவில் கிராமத்தில 60 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தது எல்லாருமே சீவல் தொழில் தான் செய்வார்கள்.

இந்த தொழிலினை பரம்பரைத் தொழிலாக கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு தலமுறை கடந்து செய்யிறம் ஆனால் 1990 ஆண்டு இடம்பெயர்ததால் இப்ப இந்த கிராமத்தில சீவல் தொழில் செய்யுறது குறைஞ்சிட்டு. என்று கூறியதோடு, இந்த கிராமத்து கள்ளு ஏன் அதி சிறப்பு வாய்ந்தது என்றால் அல்லது மக்கள் ஏன் அதிகம் விரும்புறாங்க என்றா, கீரிமலை கடற்கரையின் மண் வள தன்மை. இதனால் கள்ளு அதிகம் பாணி தன்மை கொண்டது. இதன் காரமாண அதிகம் விரும்புறாங்க. இதை விட பனை மரம் சீவுறவங்களின் திறமை இந்த கள்ளின் ருசிக்கு காரணம்.

போட்டி போட்டுக்கொண்டு முந்தின காலத்தில பனை மரம் சீவுவம். ஒரு நாளைக்கு முப்பது மரம் ஏறுவம். நான் பதினேளு வயசில சீவல் தொழிலினை ஆரம்பிச்சனான். ஆரம்பத்தில நன்பர்களோடு சேர்தே பனை மரம் ஏற பழகிக் கொண்டனான்.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில புகையிரதம் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது தபால் கொண்டு வருகின்ற வாடிக்கையாளர்களும் அடிக்கடி கள்ளு குடிக்க வருவார்கள்.

மாசி, ஆவணி காலப்பகுதியில் தான் அதிகளவு கள்ளு பனையில உற்பத்தியாகும். அந்த காலத்தில உற்பத்தி அதிகமாகிறதால வருமானமும் கூடும். என்று கூறினார்

யாழ்ப்பாண குடா நாட்டின் பரம்பரை தொழிலில் இதுவும் ஒன்று. ஆனால் குடாநாட்டுக்கு வெளியே உள்ளவர்கள் இந்த கள்ளு உற்பத்தியினை பார்த்து பிரம்மிப்பு அடைபவர்களும் இருக்கின்றார்கள். இருந்தும் இத்தொழிலினை செய்கின்ற சமுகத்தினை ஒரு வித்தியாசமான கண்னோட்டத்தில் பார்க்கின்ற வர்க்கமும் எங்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பதோடு, இதற்கெல்லாம் சாதியக்கட்டமைப்பு யாழ்ப்பாணத்தோடு இன்னமும் ஒன்றிபோய் உள்ளதென்பது தெட்டதெளிவு.

யாழ்ப்பாண கள்ளின் ருசி பற்றி தென்னிலங்கை சுற்றுலா பயணி பஸ்னாயக்கா கூறும் போது…

எங்களுக்கு யாழ்பாணத்து மண்ணுமேல இருக்கிற விருப்பத்தை விட யாழ்ப்பாண கள்ளின் மேல தான் அதிக விருப்பம். “மிச்சம் நல்லம்” தென் பகுதில இருக்கிற நம்மட ஆக்கள் வட பகுதி கள்ளினை தான் அதிகம் விரும்புவாங்க.இது ஒரு தனித்துவமான கள்ளு என்றாதால இதில ஒரு கொள்ளைப்பிரியம்.

அதனுடைய சுவையினை பாக்கணும் என்று தீராத ஆசை ரொம்ப நாளா எங்களுக்கு. அது தான் எங்க குடும்பத்தோட யாழ்ப்பாணத்துக்கு வந்திட்டம். நாங்கள் வேலனை, கீரிமலை, தவறணைகளுக்கு போனால் முதலில கொஞ்சம் கள்ளினை எடுத்து ருசி பாப்பம் அதில கடுமையாக இனிப்பும் இருக்க கூடாது, கடுமையாக புளிப்பும் இருக்க கூடாது. அப்படி இருந்தா உடனும் வாங்கி குடிப்பம்.

எங்கட இடத்தில இருக்கிற கள்ளு இத்துள் கள்ளு அதில பெரிதாக நாட்டம் கொள்ளுறது இல்ல. எங்களுக்கு யாழ்ப்பாண கள்ளில எப்படி ஆசை வந்தது என்றா? பனங்கள்ளு குளிர்மையாக இருக்கும் அதோட உடம்பையும் குளிராக வைச்சிருக்கும் என்பதை அறிஞ்சு இங்க வந்தம். யாழ்ப்பாணத்துக்கு வந்தா சனி, ஞாயிறு தினங்களில் தான் கள்ளு தவறணைக்கு குடும்பத்தோட வருவம்.

எங்கட தென் பகுதியில இருக்கிற தென்னங்கள்ளு உடம்புக்கு கூடாது. கித்துல்லா, இத்துல்லா என்று இரண்டு வகையான கள்ளு இருக்கு அது கொஞ்சம் தான் தென் பகுதில இருக்கு. அதனால அதுக்கு தனித்துவம் இல்ல. ஆனா யாழ்ப்பாணத்தில அதிகம் பனை தானே இங்குள்ள கள்ளு குருதி சுற்றோட்டத்தை இயல்பாக இயைபாக்கம் அடைவதற்க்கு இது உதவியா இருக்கு. அதவிட நம்மட பசங்களுக்கு நாம இதை குடிக்க கொடுப்பம் ஏனென்றால் இதில மருத்துவ குணம் இருக்கு தானே. இதனால யாழ்ப்பாண கள்ளில அலாதி பிரியம் என்றார்.

யாழ்ப்பாணத்தில் அதிகமாக பனை வளம் கொண்ட பிரதேசங்களாக ஊர்காவற்துறை, பண்டத்தரிப்பு பிரதேசங்களே யாழ் அரச அதிபரினால் அடையாளப்படுத்தப்படுள்ளது. இதனை விட யாழ்ப்பாணத்தில் கள்ளிக்கு அதிக கிராக்கியினை கொண்டது கீரிமலையில் உள்ள “கூவில்” கிராமம். அத்தோடு ஊர்காவற்துறை, நெடுந்தீவு என்பனவும் கிராக்கியில் முன்னணியில் உள்ளன.

கள்ளு பனை மரத்தில் இருந்து எடுக்கும் முறை பற்றி வேலனையை சேர்ந்த சந்திரன் கூறுகையில்…

முதலில பனையினை பதப்படுத்துவம். பதப்படுத்திய பின்னர் அதில் இருந்து கள்ளு வருவதற்க்கு ஆறு நாட்கள் எடுக்கும். ஆறு நாட்களும் பாளையினை பதப்படுத்துகின்ற வேலை நடைபெறும். இதற்க்கு பிறகு பாளையில் இருந்து கள்ளு வர ஆரம்பிக்கும் அந்த கள்ளினை முற் கள்ளு என்று சொல்லுவம் ஆனா அதனை பாவனைக்கு எடுக்கிறது இல்ல. பிறகு பதப்படுத்திய பாளைக்கு முட்டி கட்டுவம். மறு நாள் காலையில ஒரு போத்தல் அல்லது இரண்டு போத்தல் கள்ளினை எடுக்க கூடியதாக இருக்கும். பின்னர் அதனை தவறனையில் கொண்டுவந்து விற்பனை செய்வம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழம் நடாத்திய ஆய்வில் காலையில் பனை மரத்தில் இருந்து இறக்குகின்ற கள்ளில் அற்ககோல் நொதிப்பு தன்மை காணப்படாது. இந் நிலையில் இக் கள்ளினை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால் நன்பகல் 1.00 மணியினை தாண்டியவுடன் வளியின் தாக்கம் காரணமாக இக் கள்ளில் அற்ககோல் நொதிக்க ஆரம்பிக்கும். இவ் வேளை கள்ளினை வாங்கி குடிப்பவர்கள் அதனை அளவோடு பாவிப்பார்களானால் உடலுக்கு எத் தீங்கினையும் ஏற்படுத்ததாது.

ஆனால் அதிகமாக குடிக்கும் போது போதை நிலமைக்கு தள்ளிவிடும.; தை, மாசி, பங்குனி மாதங்களில் இந்த பனங்கள்ளு சீசன் களை கட்டும். கள்ளினை சண்டை போட்டு வாங்குகின்ற நிலமையினை ஒவ்வொரு கள்ளு தவறரணையிலையும் காணலாம். ஆனால் இதில் இன்னுமொரு வேடிக்கை என்ன வென்றால் யாழ்ப்பாணத்துக்கு வரும் வெளிநாட்டு வெள்ளை இனத்தவரும் குடா நாட்டு கள்ளினையும் ருசித்து பார்க்க தவறுவதில்லை.

யாழ் மாவட்டத்தினை பொறுத்த வரையில் அதிகமாக பல கீழ் மட்ட குடும்பங்களின் சுயதொழிலில் உழைப்பினை ஈட்டி கொள்வது. இந்த கள்ளு உற்பத்தி தான். என்று கூறிக் கொண்டாலும் யாழ்ப்பாண மண்ணின் தனித்துவத்தில் கள்ளின் செல்வாக்கு அதிகம்.

அவர்களின் வாழ்க்கையோடு ஒன்றி பிணைந்ததாக உள்ளது. இக் குடா நாட்டின் மூல வளமான பனை அதன் அடியில் இருந்து நுனி வரை அனைத்துமே பயனள்ள முடிவு பொருட்களாக கிடைக்கின்றன.

யாழ் மண்ணை பற்றியும், யாழ்ப்பாணத்தானை பற்றியும் இம் மண்ணை விட்டு போகும் போது நல்லதோர் அனுபவத்தினை பகிர்ந்து கொள்வதற்க்கு யாழ்ப்பாண கள்ளின் சுவையினையும் கூற மறக்கமாட்டார்கள்..

ஈச்சங்கள்ளு

ஈச்சங்கள்ளால் உள் அழலை, பிரமேகம், மூத்திரகிரிச்சரம், அரோசகம், புத்தி இவை போய்விடும்...உடம்பில் குளிர்ச்சி, பித்தகோபம்,வீக்கம்,திமிர்வாயு ஆகியன உண்டாகும்...

ஈச்சங்கள்ளைக் குடித்தால் உடல் குளிர்ச்சிப் பெறும்...அளவுக்கு மீறிக்குடித்தால் புத்தி கெடும்...மருந்தாகக் கருதி சில தினங்கள் குடித்தால் மூத்திரகிரிச்சரம்,உள் அழலை, வெட்டை முதலியன போகும்...பித்தம் அதிகமாகும்...ஆகவே நீண்டநாள் பழக்கமாகக் கொள்ளாமல் உள் அழலை(உட்சூடு)தீரும்மட்டும் அருந்துதல் வேண்டும்...தினமும் ஒரேஒரு வேளை மூன்று அவுன்சு வீதம் உட்கொள்ளலாம்...