தமிழ் மக்களின் இதயங்களை வெல்ல வேண்டும்! வட மாகாண ஆளுநர்

தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்க வேண்டியது என அவசியமானது என வடமாகாண ஆளனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் இதயங்களை வென்றெடுக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுனர் ரெஜினோல்ட் குரே இன்றைய தினம் கண்டி அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.

யுத்தம் வெற்றிகொள்ளப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் இதயங்கள் வென்றெடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு மக்கள் தமது நியமனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதனால், ஆளுனராக கடமையாற்றுவது தமக்கு சுலபமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.