தெல்லிப்பளையில் தேவையில்லாமல் தெருவில் திரிந்த 7 பேர் கைது

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திங்கட்கிழமை (15) சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடித் திரிந்த 7 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்களை விசாரணைக்குட்படுத்தியபோது, முன்னுக்குப்பின் முரணான வகையில் பதில் கூறியமையாலும் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த போதிய ஆவணங்களை காண்பிக்கத் தவறியமையாலும் இவர்களைக் கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.