40 வருடம் ஜேர்மனியில் இருந்தவர் யாழ் வந்து சிறுமியை சிதைக்க முற்பட்டார்

தமிழர்களின் மனித உரிமைக்காக புலம்பெயர் தேசங்களில் போராடி வந்ததாக கருதப்படும் ஜேர்மனியில் 40 வருடங்கள் வசித்து வந்த ஜெயசேகரம் என்பவன் யாழ்ப்பாணம் வந்து 9 வயதுச் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட போது யாழ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். குறித்த சிறுமியை யாழ் நகர்ப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முற்பட்டார் எனவும் சிறுமி தப்பிச் சென்று தனது தாயிடம் இது பற்றி கூறிய போது தாயார் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே ஜெயசேகரம் கைதது செய்யப்பட்டுள்ளார், 57 வயதான ஜெயசேகரம் புலம் பெயர்ந்து ஜேர்மனி சென்று 40 வருடங்களாக அங்கு வசித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இலங்கைக்கு எதிரான மனித உரிமைப் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த முக்கியஸ்தர்களின் ஜெயசேகரமும் ஒருவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயசேகரம் குறித்த சிறுமியை கற்பழிக்க முயன்றது உறுதியாக நியாயப்படுத்தப்பட்டால் இவனை நீதித்துறை கடுமையாகத் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும். இவ்வாறான காமுகர்கள் தனது முகத்தை மறைப்பதற்காக தமிழர்களின் நலன்களில் அக்கறையுடன் செயற்படுவது போல் காட்டி தம்மை உருமறைப்புச் செய்து வருகின்றனர்.  தமிழ்த்தேசியப் பற்றாளர்கள் என காட்டிக் கொள்பவர்களில் பெருமளவானோரின் மறு பக்கம் மிகவும் அசிங்கமானது வெளிப்படை உண்மை. இவனைப் போல மேலும் பல காமுகர்களும் சமூகவிரோதிகளும் தமிழ்த்தேசியம், தமிழர்களின் உரிமை என கூறி தமது முகத்தை அதற்குள் மறைத்து வருவதை தமிழ் மக்கள் இனம் கண்டு நடக்க வேண்டும்.