தமிழர்களை நாயாககூட பார்க்க மறுக்கின்றனரா தென்னிலங்கை தர்மவான்கள்?

வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதாரம் இன்னமும் வழமைக்கு திரும்பவே இல்லை. வாழ்வாதாரம் வழமைக்கு திரும்பவில்லை என்று கூறுவதை காட்டிலும் இவர்களுக்கு வாழ்க்கையே இல்லை என்று கூறலாம்.

இவர்களுக்கு அரசாங்கம், சர்வதேச சமூகம், புலம்பெயர் உறவுகள் மேற்கொள்கின்ற உதவிகள் போதாதவையாக உள்ளன. அதே நேரம் இவ்வுதவிகள் ஒழுங்காக இவர்களை வந்தடைவதும் இல்லை.இதனால் உதவும் கரங்களுக்காக இவர்கள் எப்போதும் ஏங்கி கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு போயா தினத்தின்போதும் சிங்கள சகோதர இனத்தவர்கள் தானம் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. இவர்கள் தேசிய நல்லிணக்கம், ஐக்கியம், சமாதானம், சக வாழ்வு, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக மாதத்தின் ஒரு முறை இத்தினத்திலேனும் ஏதேனும் மனிதாபிமான உதவிகளை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு செய்து கொடுப்பதே மிக பெரிய தான தர்மமாக அமையும்.

தென்னிலங்கையின் பிரபல நடிகை ஒருவருக்கு இம்மனிதாபிமானம் இருக்கின்றதோ இல்லையோ நாயபிமானம் நிறையவே இருக்கின்றது. தெரு நாய்களை தேடி சென்று கடந்த போயா தினத்தில் அன்னதானம் செய்தார்.