பெற்றோரின் கண்டிப்பால் தன்னினச் சேர்க்கையாளராக மாறிய கனேடிய தமிழ் இளைஞன்

உள்நாட்டு யுத்தத்தால் புலம்பெயர்ந்து கனடாவில் கியுபெக்கில் வாழ்கின்ற ஈழ தமிழ் இளைஞன் அமலன். இவருக்கு வயது 32.

இவர் பெற்றோருடன் 1992 ஆம் ஆண்டு மொன்றியலுக்கு புலம்பெயர்ந்து சென்றார். அப்போது இவருக்கு 07 வயது.

பிறப்பால் ஆணாகிய இவர் வீட்டு சூழல் காரணமாக தன்னின சேர்க்கையாளராக மாறி உள்ளார்.

ஒரு போதும் வீட்டில் பாலியல் குறித்து பேசப்பட்டதில்லை. பாலியல் குறித்து பேச வேண்டிய தேவை இருந்ததாக பெற்றோர் உணர்ந்ததில்லை.

ஹொலிவூட் படங்களில் செக்ஸ் காட்சிகள், வருகின்றபோது பெற்றோர் அவசரமாக ஓட விடுவார்கள். கற்பழிப்பு காட்சிகள் வருகின்றபோதும் அப்படித்தான். ஆனால் தமிழ் படங்களில் நகைச் சுவையாக வருகின்ற அலிகள் பாத்திரங்களை பார்ப்பதில் தடை இருக்கவில்லை. ஆனால் இப்பாத்திரங்களே இவருக்கு முன்னுதாரணங்கள் ஆகி விட்டன.

இவர் தன்னினச் சேர்க்கையாளராக மாற நேர்ந்தது குறித்தும், இதனால் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படையாகவே எழுதுகின்றார்.