நியூசிலாந்து செல்ல முயன்ற தமிழர்கள் நீர்கொழும்பில் கைது

நியூசிலாந்துக்கு கடல் வழியாக சட்டவிரோதமாக செல்ல முயன்ற 08 பேர் நீர்கொழும்பு கதிரான பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் முல்லைத்தீவு, கல்முனை, நீர்கொழும்பு, மாரவில ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் 23 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர்.