அளவெட்டிப் பகுதியில் காவாலியை நையப்புடைத்து கட்டி வைத்த பொதுமக்கள்

அளவெட்டிப் பகுதியில் போதைப் பொருளுக்கு அடிமையாகிய காவாலி ஒருவன் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கடும் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.  இவ்வாறு கடந்த 14ம் திகதி இரவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுடன் தகராறில் ஈடுபடவே அங்கு திரண்ட இளைஞர்கள் அவனை நையப்புடைத்து மரத்தில் கட்டி வைத்துவிட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

அப்பகுதிக்கு வந்த தெல்லிப்பளைப் பொலிசார் குறித்த காவாலியை மீட்டு தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். காயங்கள் மாறியவுடன் அவன் மல்லாகம் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்படுவான் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.