அவசரத்தில் 50 செக்கன் மட்டும் ஓட்டி 5 ஆயிரம் கொடுத்த யாழ் இளைஞர்கள்

யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வீதிச் சமிக்கையை மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டிய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு யாழ் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டனர்.

இவர்களது வழக்கை விசாரித்த நீதவான் இவர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்துமாறு உத்தரிவிட்டார். யாழ்ப்பாணத்தில் வீதிச்சமிக்கையை மீறியவர்களை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆயர்ப்படுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தது இதுவே முதல்தடவை எனத் தெரியவருகின்றது. இனி வரும் காலம் இவ்வாறு அவசரப்பட்டு வீதிச் சமிக்கையை மீறிச் செயற்படுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்படுவார்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.