வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆயர்

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் குறித்த வழக்கு நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் தடுத்து வைக்கபட்டு உள்ள 12 சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை அடுத்து சந்தேக நபர்களை எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டார்.