தென்னை மரத்திலிருந்து விழுந்த சீவல்தொழிலாளி உயிரிழப்பு

தென்னை மரத்தில் இருந்து கீழே வீழ்ந்த சீவல் தொழிலாளி, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக, கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தை சேர்ந்த வேலன் யோகராஜா வயது(64) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

 கடந்த 9ஆம் திகதி, கள்ளு இறக்குவதற்கு மரத்தில் ஏறியவர் பாளை சறுக்கியதில் மரத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

உடனடியாக அவர் உறவினர்களினால் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையின் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.