16. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ரிஷபம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வழக்குகள் சாதகமாகும். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

மிதுனம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

கடகம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். ஓரளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

சிம்மம்

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

கன்னி

கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

துலாம்

ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சுவாதி நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்-. உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம் மஞ்சள்

விருச்சிகம்

பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

தனுசு

புதிய யோசனைகள் பிறக்கும். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

மகரம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

கும்பம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சலிப்பு, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். யோகா, தியானம் என மனம் செல்லும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

மீனம்

சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பார்த்தவை தாமதமாகும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். லேசாக தலை வலிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்