15. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

ரிஷபம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

மிதுனம்

நட்பால் ஆதாயம் உண்டு. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

கடகம்

தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

கன்னி

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

துலாம்

கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

விருச்சிகம்

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்

தனுசு

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

மகரம்

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

கும்பம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

மீனம்

சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்