வட்டுக்கோட்டை வடக்குப் பகுதியில் பெண்ணின் தாலியை அறுத்தெடுத்த கள்ளவர்கள்

வட்டுக்கோட்டை வடக்குப் பகுதியில் வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலி அறுக்கப்பட்ட சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

9 பவுண் தாலிக் கொடியில் 5 பவுண்கள் அளவிலான பகுதி, குறித்தப் பெண் பற்றிப் பிடித்திருந்தமையால் காப்பாற்றப்பட்டுள்ளது.

திருமண வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குறித்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலியை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துள்ளனர்.

குறித்தப் பெண் தாலிக் கொடியைப் பற்றிப் பிடித்தமையால் 5 பவுண் அளவிலான பகுதி காப்பற்றப்பட்டதுடன், மிகுதி 4 பவுண் தாலியும் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பெண் மோட்டார் சைக்கிள் இலக்கத்தைக் குறித்து, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.