12. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ரிஷபம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

மிதுனம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

கடகம்

குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

சிம்மம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். பூரம் நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

கன்னி

பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துப் போகும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

துலாம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

விருச்சிகம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

தனுசு

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

மகரம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

கும்பம்

பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

மீனம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். மனைவிவழியில் உதவுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்