11. 02. 2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

ரிஷபம்

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

மிதுனம்

தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

கடகம்

காலை மணி 9.30 வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைசுமை வந்து போகும். பிற்பகல் முதல் கணவன்& மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் நலம் சீராகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

சிம்மம்

காலை மணி 9.30 வரை ராசிக்குள் சந்திரன் நுழைவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன்&மனைவிக்குள் ஈகோ பிரச்சனை வந்து நீங்கும். மகம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

கன்னி

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வயிற்று வலி வரக்கூடும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

துலாம்

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

விருச்சிகம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

தனுசு

காலை மணி 9.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும். பிற்பகல் முதல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்

மகரம்

காலை மணி 9.30 முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்க்கப்பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

கும்பம்

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்

மீனம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்