வலி.வடக்கில் இரண்டாம் கட்டமாக 282.5 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்!

வலி.வடக்கில் இரண்டாம் கட்டமாக 282.5 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்!

யாழ்.வலிகாமம் பகுதியில் இரண்டாம் கட்டமாக 282.5 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். உயர்பாதுகாப்பு வலயங்களுக்கு உட்பட்டிருக்கும் மகக்ளின் காணிகளை மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்க மீள்குடியேற்ற அமைச்சு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மீள்குடியேற்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் அமைச்சரவையில் தாக்கல் செய்திருந்த வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய மீள்குடியேற்றம் தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு கடந்த 7 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களுடைய நிலத்தை மக்களிடமே வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரத்தை மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் அமைச்சரவைக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் 984 ஏக்கர் நிலத்தை விடுவிப்பதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியிருக்கின்றது.

இதேவேளை 282.5 ஏக்கர் நிலத்திற்குள் எந்தெந்த பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் தமக்கு கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அந்த தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் 282.5 ஏக்கர் நிலம் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவதற்கான அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.

மேலும் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் ஊடாக வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருக்கும் பொதுமக்களுடைய, நிலங்களை பகுதி, பகுதியாக விடுவித்து மக்களுக்கு வழங்குவதற்கான முன்னேற்பாட்டு நட வடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அமைச்சரவை அங்கீகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே தேசிய பாதுகாப்பு நிலமைகளை கருத்தில் கொண்டு மக்களுடைய காணிகளை பகுதி பகுதியாக, விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மீள்குடியேற்ற அமைச்சர் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வலி.வடக்கில் இரண்டாம் கட்டமாக 282.5 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்!

வலி.வடக்கில் இரண்டாம் கட்டமாக 282.5 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும்!